கொழும்பு - பேஸ்லைன் வீதியில் 3 வாகனங்கள் மோதி விபத்து ; இருவர் காயம்! | Virakesari.lk
Source: Virakesari.lk
கொழும்பு - பேஸ்லைன் வீதியில் தெமட்டகொட மேம்பாலத்திற்கு அருகில் 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.
அங்குலானை பிரதேசத்தில் இருந்து வத்தளை நோக்கி பயணித்த பஸ் ஒன்று பேக்கரி உணவுகளை விற்பனை செய்யும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் குறித்த முச்சக்கரவண்டி மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தினால் குறித்த வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்தவரும் மோட்டார் சைக்கிள் செலுத்தியவரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.