Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

தலைக்கவசத்திற்குள் வைத்து போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது - தமிழ்வின்

தலைக்கவசத்திற்குள் வைத்து போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது - தமிழ்வின்

Source: Tamilwin

மன்னார் - சாவற்கட்டு பகுதியில் தலைக்கவசத்திற்குள் வைத்து போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை (09.02.2024) இடம்பெற்றுள்ளது.

மோட்டர்சைக்கிளின் தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு வந்த 31 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸாரினால் சாவற்கட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் விடத்தல் தீவு பகுதியில் இருந்து R15 ரக மோட்டார் சைக்கிளின் தலைகவசத்தின் உட்பகுதியில் 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியன மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.