யாழ். கொடிகாமத்தில் விபத்து ; இருவர் வைத்தியசாலையில் | Virakesari.lk
Source: Virakesari.lk
யாழ். கொடிகாமத்தில் விபத்து ; இருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பஸ் ஒன்று உழவு இயந்திரமொன்றும் மோதியதில் இரண்டு வாகனங்களின் சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை (12) காலை, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது காயமடைந்த இரண்டு வாகனங்களின் சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.