கொழும்பு - மோதரையில் துப்பாக்கிப் பிரயோகம் - ஒருவர் காயம் | Virakesari.lk
Source: Virakesari.lk
கொழும்பு - மோதரை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிப் பிரயோகம் செவ்வாய்க்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 51 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.