Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - ஐபிசி தமிழ்

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட காவல்துறையினரால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டார்.

அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் நேற்று (13) அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

ஒரு மணி நேரத்தில் சந்தேக நபர் களவாடப்பட்ட பொருட்களுடன் அச்சுவேலி குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.