இலங்கையில் 5 ஜீ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுவதில் சிக்கல் - தமிழ்வின்
Source: Tamilwin
இலங்கையில் 5ஜீ (5G) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 ஜீ தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்கான உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இதனால் எப்பொழுது இலங்கையில் 5ஜீ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றிய தகவல்களை வெளியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு பெருமளவு செலவுகள் ஏற்படும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், அரசாங்கமும் தொலைதொடர்பு நிறுவனங்களும் இந்த சேவையை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதிலும் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு பாரியளவில் முதலீடு செய்ய நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
5 ஜீ சேவைக்கான கட்டணங்களும் அதிகமாக காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
5 ஜீ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான நிலைமை உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் 5 ஜீ தொழில்நுட்பம் வெற்றிகரமான முறையில் பரிசோதனை செய்யப்பட்ட நாடாக இலங்கை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.