பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை கண்காணிப்பவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு | Virakesari.lk
Source: Virakesari.lk
களுத்துறை - பேருவளை மீன்பிடித் துறைமுகத்தின் படகுகளை கண்காணிப்பவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மீன்பிடித் துறைமுகத்தின் படகுகளை கண்காணிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு கடமைக்கு வந்துள்ள நிலையில் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் காணாமல்போனவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது அவரது சடலம் கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.