முல்லைத்தீவில் காட்டுயானை தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம் - தமிழ்வின்
Source: Tamilwin
முல்லைத்தீவு - வெலிஓயா பிரதேசத்தில் வயல் காவலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று (13.02.2024) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஜனகபுரம் - வெலிஓயா பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு காட்டுயானை தாக்கியதில் படுகாயமடைந்து கால் முறிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.