Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேச்சல்தரைக்கு 'பரக்குவாட்' நாசினி விசிறி தீ வைக்கும் நடவடிக்கை | Virakesari.lk

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேச்சல்தரைக்கு 'பரக்குவாட்' நாசினி விசிறி தீ வைக்கும் நடவடிக்கை | Virakesari.lk

Source: Virakesari.lk

மட்டக்களப்பு - மாதவனை, மயிலத்தமடு பகுதியில் பெரும்பான்மை இனத்தவரால் கால்நடைகளின் மேச்சல்தரையினை பரக்குவாட் போன்ற களைநாசினிகளை விசிறி, தீ வைத்து வருவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பண்ணையாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,

காணி ஆக்கிரமிப்பாளர்கள், தாம் அபகரித்த காணிகளில் பயிர் செய்கையினை மேற்கொண்டு வருவதுடன், அருகிலுள்ள வேறு மேச்சல்தரை காணிகளையும் அபகரிக்கும் நோக்குடன் புற்தரைகளையும், காடுகளையும் தீயிட்டு அழித்து வருகின்றனர்.

இச்சம்பவம் கடந்த 14ம் திகதி புதன்கிழமை தொடக்கம் இடம் பெற்று வருகின்றது. இதனை வனலாகா, வன ஜீவராசிகள் திணைக்களம் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

பரக்குவாட் களைநாசினி விசிறிய புல் தரையில் தமது கால்நடைகள் மேய்வதால் சில மாடுகள் நோய்வாய்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

எமது வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது, இந்த அநீதிகளை கேட்பதற்கும் எவருமில்லை, பார்ப்பதற்கும் எவருமில்லை என அங்குள்ள பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.