Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை - தமிழ்வின்

யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை - தமிழ்வின்

Source: Tamilwin

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ். பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது.

அத்துடன், மத்தள விமான நிலையம் தொடர்பில் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டன. அதன்படி, டெண்டர் சபை ஒரு முதலீட்டாளரை தெரிவு செய்துள்ளது.

குறித்த முதலீட்டாளருடனான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த வாரம் உடன்பாடு எட்டப்படலாம்.

அதன் மூலம் அந்த விமான நிலையத்தையும் இலாபமீட்டும் வகையில் மாற்ற முடியும்.

அத்தோடு, இந்த ஒப்பந்தம் ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.