Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மூன்று வருடங்கள் சிறப்பான சேவையாற்றிய வைத்தியருக்கு யாழில் கெளரவம் - தமிழ்வின்

மூன்று வருடங்கள் சிறப்பான சேவையாற்றிய வைத்தியருக்கு யாழில் கெளரவம் - தமிழ்வின்

Source: Tamilwin

யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் கலாநிதி நந்தன் மனோன்மணியின் பிரிவுஉபசார விழாவும், புதிய வைத்தியரை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இடமாற்றமாகி சென்ற ஊழியர் நலன்புரி சங்க ஊழியர்களை கெளரவிக்கும் குறித்த நிகழ்வு நேற்றைய தினம்17.02.2024 அம்பன் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மதியம் 12.00 ஆரம்பமான குறித்த நிகழ்வில் மூன்றுவருட சேவையை நிறைவு செய்து தற்பொழுது பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றலாகி செல்லும் வைத்திய கலாநிதி நந்தன் மனோன்மணி மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டார்.

அம்பன் வைத்தியசாலையில் மூன்று வருடங்கள் கடமையாற்றி மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி மக்கள் மனதில் இடம்பிடித்த ஒருவைத்தியராக திகழும் வைத்தியர் நந்தன் மனோன்மணி மக்கள் கண்ணீர்மல்க பிரியாவிடை கொடுத்தனர்.

இதில் சமூகமட்ட அமைப்பு பிரநிதிகள், வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு வைத்தியர், ஊழியர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.