100 விக்கெட்: ஹசரங்கா சாதனை
Source: Tamil Murasu
தம்புலா: இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கா டி20 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தம்புலாவில் நடந்த இரண்டாவது டி20 போட்டியின்போது 28 வயதான ஹசரங்கா இச்சாதனையைப் படைத்தார். இதுவரை 63 போட்டிகளில் விளையாடி, 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் இவர்.
அனைத்துலக டி20 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரர் இவர். முன்னதாக, வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா அந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.
இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 72 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியிலும் வென்றிருந்ததால் அவ்வணி தொடரையும் கைப்பற்றியது.
மூன்றாவது, கடைசி டி20 போட்டி புதன்கிழமை (பிப்ரவரி 21) நடக்கிறது.