முல்லைத்தீவில் லொத்தர் சீட்டு விற்பனை நிலையம் தீக்கிரை - தமிழ்வின்
Source: Tamilwin
முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியில் லொத்தர் சீட்டு விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை நிலையம் ஒன்று கடந்த (19.02.2024) இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விற்பனை நிலையத்திற்குள் கதிரை,மேசை ஒன்றும் ,120 லொத்தர் சீட்டடுக்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் இனம் தெரியாதவர்களால் தீ மூட்டப்பட்டதா? அல்லது வேறு அசம்பாவிதத்தினால் தீ ஏற்பட்டதா? போன்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.