நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு - Global Tamil News
Source: Global Tamil News
தம்புள்ளை - இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவா் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாா். நேற்று (23) பிற்பகல் நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பற்ற இடத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் தம்புள்ளை காவல்துறையினா் உயிர்காப்புப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலி - ஹல்வித்திகல பகுதியைச் சொ்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.
அவர் தனது பாட்டி மற்றும் சகோதரருடன் அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.