அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனம் வீதியில் கவிழ்ந்து விபத்து! | Virakesari.lk
Source: Virakesari.lk
கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் தங்கோவிட்ட ஹெலகலைக்கு அருகில் இன்று (26) காலை அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் உதவியாளர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து அந்த வீதியின் போக்குவரத்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்தது
மிதிரிகிரியவிலிருந்து களுத்துறைக்கு அரிசி ஏற்றிச் சென்றபோது காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் உதவியுடன் அரிசியை வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.