Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

பாதசாரிகளுக்கு இடையூறு: சம்மாந்துறையில் அகற்றப்படும் பாதையோர அங்காடி கடைகள் - தமிழ்வின்

பாதசாரிகளுக்கு இடையூறு: சம்மாந்துறையில் அகற்றப்படும் பாதையோர அங்காடி கடைகள் - தமிழ்வின்

Source: Tamilwin

அம்பாறை - சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதசாரிகளுக்கு பல்வேறு வழிகளிலும் இடையூறை ஏற்படுத்தும் பாதையோர அங்காடிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

சம்மாந்துறை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று குறித்த நடவடிகடகை ஆரம்பிக்கப்பட்டது.

சம்மாந்துறை நகரத்திலிருந்து அம்பாறை வீதி, மல்கம்பிட்டி வீதி பொலிஸ் வீதி மற்றும் கல்முனை வீதிகளின் இரு மருங்குகளிலும் தற்காலிக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களினால் பாதசாரிகள் மட்டுமல்லாது போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பல்வேறு வகையான வாகனங்களுக்கும் பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தி வருவதுடன் வீதி விபத்துகளும் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்நிலையில் இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே முஹம்மட் தலைமையில் கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கம் உள்ளிட்ட ஒன்றிணைந்த குழுவினரால் அடையாளம் காணப்பட்ட தற்காலிக அங்காடி வியாபாரிகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.