Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மட்டக்களப்பு சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு - தமிழ்வின்

மட்டக்களப்பு சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு - தமிழ்வின்

Source: Tamilwin

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது, பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னமின் தலைமையில் கடந்த செவ்வாய்க் கிழமை (27.022024) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

தாய்மொழிக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறி, உலகின் அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையை பாதுகாக்கும் வகையில் பெப்ரவரி 21ஆம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக ( International Mother Language Day) ஐ.நாவின் யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது.

இதனையடுத்து, 2000ஆம் ஆண்டிலிருந்து பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகின்றது.

இதற்கமைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வி்ல், " நம் தாய்மொழியை பேணுதல் ஒரு பன்முக நோக்கு" எனும் தலைப்பின் கீழ் தென்கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் சஞ்சீவி சிவகுமாரினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டதுடன், பிரதேச கலைஞர்களின் பாடல்கள் மற்றும் கலைக்கழக மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் கதிரவன் பட்டிமன்ற பேரவை வழங்கும் 126ஆவது சிறப்பு பட்டிமன்றம் "தற்காலத்தில் தமிழ்மொழி வளர்கிறது.தற்காலத்தில் தமிழ்மொழி தளர்கிறது" எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணி தரன் , பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Could not load content