Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

BANvsSL : 3 வருடங்களுக்கு பிறகு அழைக்கப்பட்ட இலங்கை வீரர் !

BANvsSL : 3 வருடங்களுக்கு பிறகு அழைக்கப்பட்ட இலங்கை வீரர் !

Source: dinasuvadu.com

BANvsSL : இலங்கை கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்று பயண தொடரில் 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதலில் இரு அணிகளும் டி20 தொடரை விளையாட உள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டியானது வருகிற மார்ச்-4 ம் தேதி சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இலங்கை அணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த குசல் பெரேரா கடைசி நேரத்தில் உடல் நல குறைவால் திடிரென்று அந்த அணியிலிருந்து விலகினார். இதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானான நிரோஷன் டிக்வெல்லா இடம் பெற்றுள்ளார்.

நிரோஷன் டிக்வெல்லா 3 வருடத்திற்கு முன்பு இலங்கை அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடிவர் ஆவார். அதன் பிறகு அவரது மோசமான ஃபார்ம் காரணமாக அவர் இலங்கை அணியிலிருந்து விளக்கப்பட்டிருந்தார். தற்போது இவரை இலங்கை கிரிக்கெட் வாரியம், இலங்கை அணியின் டி20 தொடருக்கான அணியில் சேர்த்துள்ளனர். இதன் மூலம், 3 வருடங்கள் கழித்து இலங்கை அணிக்காக விளையாட உள்ளார்.

நிரோஷன் டிக்வெல்லா, இலங்கை அணிக்காக டி20 போட்டிகளில் மொத்தம் 28 போட்டிகளில் விளையாடி 480 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 55 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1604 ரன்களும், 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2757 ரன்களும் எடுத்துள்ளார்.

இலங்கை அணி வீரர்கள் :-

சரித் அசலன்கா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா , குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா,மேத்யூஸ், தீக்சனா, தனஞ்சயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), மதுஷங்கா, நுவான் துஷாரா, பதிரனா, அகிலா தனஞ்சயா, பினுரா பெர்னண்டோ, கமிந்து மெண்டிஸ், அவிஷ்கா,பெர்னண்டோ, ஜெப்ரி வாண்டர்சே.