பலாலியில் 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்
Source: www.pathivu.com
யாழ்ப்பாணம் - பலாலி கிழக்கு பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் காணி தொடர்பிலான நடமாடும் சேவையின் போது, இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். அதன் போதான கலந்துரையாடலின் போதே இராணுவ அதிகாரிகள் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.
பலாலி கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள விவசாய நிலங்களில் 59 ஏக்கர் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்வரும் 10ஆம் திகதி அக் காணிகளை விடுவித்து , உரிமையாளர்களிடம் கையளிக்க முடியும் என தெரிவித்தனர்.
அதேவேளை கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 105 ஏக்கர் காணிகளையும் விடுவிக்க நடவடிககி எடுத்து உள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.