Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

கைக்குண்டு வெடித்ததில் ஒருவர் காயம்

கைக்குண்டு வெடித்ததில் ஒருவர் காயம்

Source: www.pathivu.com

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் காணியை துப்பரவு செய்து அதன் குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்தபோது அதில் இருந்த கைக்குண்டு ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.