அநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் வாகன விபத்து: மூவர் பலி இருவர் படுகாயம் - தமிழ்வின்
Source: Tamilwin
அநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று(09.03.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இசை நிகழ்ச்சியொன்றை பார்வையிட்டு வீடு திரும்பியவர்கள் மீது கெப் ரக வாகனமொன்று மோதியுள்ளதுடன், விபத்தின் பின்னர் கெப் ரக வாகனத்துடன் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
விபத்தில் ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 15, 19 மற்றும் 21 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றை பார்வையிட்டு, 7 பேரை கொண்ட குழுவொன்று வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், கெப் ரக வாகனமொன்று விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கெப் ரக வாகனம் அநுராதபுரம் திசையை நோக்கி பயணித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.