Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

இலங்கை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது ! | Virakesari.lk

இலங்கை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது ! | Virakesari.lk

Source: Virakesari.lk

நெடுந்தீவு - காங்கேசன்துறை பகுதியில் வைத்து சனிக்கிழமை (9) இரவு 22 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடனும், காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒரு படகுடனும் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலதிக நடவடிக்கைகளை நீரியல்வள திணைக்களத்தினர் மேற்கொள்வார்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.