Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

காரைநகரில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

காரைநகரில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

Source: www.pathivu.com

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போதே காரைநகர் கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.