யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பெண் கைது
Source: www.pathivu.com
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள காணியொன்றை மோசடியாக உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் பகுதியில் மூவருக்கு சொந்தமான காணி ஒன்றினை , ஒருவர் காலமான நிலையில் , மற்றைய நபர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு தெரியாமல் மற்றையவர் தனது பெயருக்கு காணியை உரிம மாற்றம் செய்துள்ளார்.
இது தொடர்பில் அறிந்து கொண்ட நபர் , தனக்கு தெரியாமல் தனக்கு சொந்தமான காணியினை உரிம மாற்றம் செய்து மற்றைய நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோசடியான முறையில் காணி உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்துள்ளனர்.