பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழக கிரிக்கெட் திருவிழா - தமிழ்வின்
Source: Tamilwin
மட்டக்களப்பு - பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகம் நடாத்திய பி. பி.எல்.கிரிக்கெட் திருவிழாவின் இறுத்திப்போட்டி நிகழ்வு கழகத் தலைவர் ஆர். கோபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று(11.03.2024) இடம்பெற்றள்ளது.
இவ்விளையாட்டுத் திருவிழாவின் இறுதி நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்திலே துடுப்பெடுத்தாடி விளையாடி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இப்போட்டியில் 4 கழகங்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இறுத்திப்போட்டிக்கு கல்லாறு வெங்களோ கிங்ஸ் அணியும் பொட்டுறப்டர் அணியும் பங்கு பற்றி விளையாடின.
இந்நிலையில், 10 ஓவர்களைக் கொண்ட இப்போட்டியில் பொட்டுறப்டர் அணியினர் 5 விக்கட் இழப்பிற்கு 119 ஓட்டங்களையும், கல்லாறு வெங்களோ கிங்ஸ் அணி 9.4 ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து, 71 மேலதிக ஓட்டங்களால் பொட்டுறப்டர் அணி வெறிபெற்றிருந்தது. இதில் பங்கு கொண்ட வீரர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற கழகத்திற்கு வெற்றிக் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உ.சிவராஜன், மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.