ஜாபர் சாதிக்கிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை..!!
Source: Dinakaran
டெல்லி: இலங்கைக்கு போதைப்பொருளை ஜாபர் சாதிக் கடத்தினாரா? என என்சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு டெல்லியில் உள்ள குடோனிற்கு ஜாபர் சாதிக்கை அழைத்து சென்று விசாரணை நடைபெற்று வருகிறது.