வட்டுக்கோட்டை சந்தியில் முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் காயம் - தமிழ்வின்
Source: Tamilwin
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவாதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் தனியார் போக்குவரத்து பேருந்து வட்டுக்கோட்டை சந்தியை கடக்க முற்பட்டபோது அராலி தெற்கு பகுறியில் இருந்து வந்த, வெதுப்பக பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள வெற்றுக் காணியினுள் இருந்த கற்களின் மேல் மோதியுள்ளது.
இதனால் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.