மட்டக்களப்பில் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வாகனங்கள் - தமிழ்வின்
Source: Tamilwin
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் வாகனங்கள் மீது திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த சோதனை நடவடிக்கைகள், காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் நேற்றிரவு (13.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பொலிஸார், விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையில் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடனும் மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுமார் ஆறு மணி நேரம் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.