Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

இலங்கை : முன்னாள் வீரரான திரிமான்னே விபத்துக்குள்ளானார் !

இலங்கை : முன்னாள் வீரரான திரிமான்னே விபத்துக்குள்ளானார் !

Source: dinasuvadu.com

இலங்கை : இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லஹிரு திரிமான்னே தற்போது நடைபெற்று வரும் லெஜண்ட் கிரிக்கெட் டிராபி 2024 தொடரில் நியூயார்க் சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் என்ற அணிக்காக இவர் விளையாடி வருகிறார். இவர் தற்போது, அனுராதபுரம் திரப்பனே பகுதியில் காரில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கும் போது லாரியில் மோதி விபத்துக்குள்ளாயிருக்கிறார்.

இந்த விபத்தை குறித்து இலங்கை பத்திரிகைகளில் தெரிவிப்பது என்னவென்றால், 117 மைல் அஞ்சல் பகுதிக்கு அருகில் உள்ள அனுராதபுரம் திரப்பனே பகுதியில் லஹிரு திரிமான்னே விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும். அதிர்ஷ்டவசமாக, ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும், கவலை அடையும் வகையில் எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியம் சற்று

இலங்கை அணியின் திரிமன்னே 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26.43 சராசரியில் 2088 ரன்கள் (3 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள்) அடங்கும். இவர் ஒடிஐ போட்டிகளில், 127 போட்டிகளில் விளையாடி 3194 ரன்களை (4 சதங்கள் மற்றும் 21 அரை சதங்கள் அடங்கும்) எடுத்துள்ளார். மேலும், 82 சர்வேதச டி20 போட்டிகளில் விளையாடி 1413 ரன்களை (5 அரை சதங்கள் அடங்கும்) எடுத்துள்ளார்.