உரும்பிராய் பகுதியில் விபத்து - படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி - தமிழ்வின்
Source: Tamilwin
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (17.3.2024) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்று செயழிலந்த நிலையில் அதனை பரிசோதித்துக்கொண்டிருந்தவர் பின்னால் பட்டா ரக வாகனமொன்று மோதியதினாலேயே விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் காயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.