Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

குடும்பத்தில் வாக்குவாதம் : மயங்கி விழுந்த பெண் திடீர் மரணம் - தமிழ்வின்

குடும்பத்தில் வாக்குவாதம் : மயங்கி விழுந்த பெண் திடீர் மரணம் - தமிழ்வின்

Source: Tamilwin

வட்டுக்கோட்டை - தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

49 வயதுடைய குடும்பப்பெண்ணே நேற்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் அவரது வீட்டில் இருந்து சுமார் 30 மீட்டர்கள் தூரத்தில் உள்ள அயல்வீட்டுக்கு சென்று தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கி குடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்கு வெளியேவந்துள்ளார்.

இதன்போது அவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி அவரது வீட்டுக்கு கொண்டு செல்லும்போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கணவர் அவரை தாக்குவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் தாயார் வழமையாக பாவிக்கும் மாத்திரைகளை விழுங்கிவிட்டு அயல்வீட்டுக்கு சென்றதாக அவரது மகள் தெரிவிக்கின்றார்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சடலமானது உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.