பொருளாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்துவரும் மாணவர்களுக்கு அமைச்சரால் வழங்கப்பட்ட உதவியானது காலமறிந்து செய்யும் மற்றுமொரு பேருதவியாக அமைகின்றது
Source: Uthayan News
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தீவக மக்களுக்கும் அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் ஓர் இரட்சகராகவே இருந்து வந்துள்ளார் என தெரிவித்துள்ள நெடுந்தீவின் கல்விச் சமூகத்தினர் அமைச்சரின் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களின் நலன் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேசிய கடற்தொழில் தினத்தை முன்னி்ட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் கடற்றொழில் அமைச்சின் நெடுந்தீவு பிரதேசத்தை உள்ளடக்கிய 8 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்விகழ்வுகளின் போது பாடசாலைகளின் கல்விச் சமூகத்தினரால் அமைச்சரின் குறித்த நடவடிக்கைகளுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்ட அதேநேரம் அமைச்சரது கடந்தகால தூரநோக்குள்ள மக்கள் மற்றும் மாணவர் நலன்சார் செயற்றிட்டங்கள் குறித்தும் நினைவுகூர்ந்திருந்தனர்.
குறிப்பாக பொருளாதார ரீதியில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களின் நலன்களை பல்வேறு வழிகளில் தீர்வுகண்டுகொடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவரும் அமைச்சர் தீவக பகுதியின் நலன்களில் ஏனைய பகுதிகளை விட சற்று அதிக அக்கறையுடன் ஈடுபட்டுவருவதை காலாகாலமாக பார்க்க மடிகின்றது.
அதேநேரம் அமைச்சரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு தீவக மக்களும் தமது நன்றியுணர்வுகளை அமைச்சருக்கு காட்டி வருகின்றனர்.
மேலும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்துவரும் மாணவர்களுக்கு தற்போது அமைச்சரால் வழங்கப்பட்ட இந்த கற்றல் உபகரண உதவியானது காலமறிந்து செய்யும் பேருதவியாகவும் அமைகின்றது
இதேவேளை தற்போது பொருளாதார நெருக்கடி பல மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது.
எனவே எமது பிரதேச மாணவர்களின் கல்வி சீராக முன்னெடுக்கப்படுவதற்கு மாணவர்களுக்கான வசதி வாய்ப்புகள் மேலும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக கடற்தொழில் அமைச்சினால் பல்வேறு மக்கள் நலன்சார் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கமைய விசேட ஏற்பாட்டின் ஊடக பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கது.