Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணிக்கு பின்னடைவு... முக்கிய வீரர் விலகல்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணிக்கு பின்னடைவு... முக்கிய வீரர் விலகல்

Source: DailyThanthi

வங்காளதேசம் - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்காளதேசம் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டிக்கான வங்காளதேச அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த வங்காளதேச அணியின் முக்கிய வீரரான முஷ்பிகுர் ரஹீம் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது வலது கட்டை விரலில் காயம் அடைந்த அவருக்கு எக்ஸ்ரே மேற்கொண்டதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குணமடைய 3 முதல் 4 வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.