யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு உள் நுழைய முயற்சித்த மீனவர்கள்! | Virakesari.lk
Source: Virakesari.lk
யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு உள் நுழைய முயற்சித்த மீனவர்கள்!
இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டினை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பித்த மீனவர்கள் தமது பொறுமை இழந்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துவங்கி தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதுடன் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொலிசார் மீனவர்களை சுமூகமான நிலைக்குள் கொண்டுவர முயன்றும் மீனவர்கள் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் கை விலங்கினை காட்டி மீனவர்களை அச்சுறுத்தும் விதத்தில் மிரட்டி வருகின்றனர்.