Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் ஜனாதிபதியால் விடுவிப்பு - தமிழ்வின்

யாழில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் ஜனாதிபதியால் விடுவிப்பு - தமிழ்வின்

Source: Tamilwin

யாழ் - வலிகாமம் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 278 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டன.

குறித்த காணி விடுவிக்கும் நிகழ்வானது, இன்று ( 22.03.2024) யாழ் - அச்சுவேலி வயாவிளான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஜே - 244 வயாவிளான் கிழக்கு, ஜே - 245 வயாவிளான் மேற்கு, ஜே - 252 பலாலி தெற்கு, ஜே - 254 பலாலி வடக்கு, ஜே - 253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.