யாழில் சொகுசு பேருந்து விபத்து - கிளிநொச்சி வாசி உயிரிழப்பு
Source: www.pathivu.com
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி விவேகானந்தா நகரை சேர்ந்த சின்னராசா சுதன்ராஜா (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து, யாழ் - கண்டி நெடுஞ்சாலையில், மீசாலை வீரசிங்கம் கல்லூரி முன்பாக பாதசாரி கடவையில் பிரிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், பேருந்தின் சாரதியும் நடத்துனரும், விபத்து நடைபெற்ற இடத்தில் பேருந்தினை கைவிட்டு, அங்கிருந்து தப்பி சென்று, கொடிகாம பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்துள்ளனர்.
சரண்டைந்த இருவரையும், கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.