இலங்கையில் ஹீரோவாக செயற்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய இளைஞன் - தமிழ்வின்
Source: Tamilwin
மஹியங்கனை - கண்டி வீதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே வெரகங்தொட்ட மகாவலி பாலத்தில் இருந்து பெண் ஒருவர் நேற்று இரவு குதித்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்கள் குழு ஒன்று உடனடியாக அவரை காப்பாற்றி வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெண் ஒருவர் நேற்று இரவு 7.00 மணியளவில், மகாவலி ஆற்றில் குதிப்பதற்காக பாலத்தின் கொங்கிரீட் வேலியின் மீது ஏறிச் சென்றதை அவதானித்த இளைஞர்கள் அவரைப் பிடிக்க ஓடியபோது, அப்பெண் பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.
குதித்த பெண் பாலத்திற்கு அடியில் உள்ள நிலப்பகுதியில் விழுந்ததாக தெரியவந்துள்ளது.
மஹியங்கனை பொலிஸாரால் பாலத்திற்கு அருகில் இருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளில் அவரது கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட கைத்தொலைபேசியில் அவரது பெற்றோருக்கு அழைப்பேற்படுத்தி சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பாலத்தில் இருந்து குதித்த பெண் மினிபே பகுதியில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் ஒரு கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.