Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மதுபோதையில் தம்பதி மீது கோடாரியால் கொடூர தாக்குதல் - மனைவி பலி கணவன் படுகாயம் - தமிழ்வின்

மதுபோதையில் தம்பதி மீது கோடாரியால் கொடூர தாக்குதல் - மனைவி பலி கணவன் படுகாயம் - தமிழ்வின்

Source: Tamilwin

திருகோணமலை (Trincomalee) பகுதியில் நபரொருவர், மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்தததுடன், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக் கொடூர சம்பவம் நேற்றிரவு (29.3.2024) திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிரோமாலா பெர்ணாந்து என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சந்தேகநபரை, வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட அவர், கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்ததுடன், கணவன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க என்ற சந்தேகநபரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.