சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பிணையில் விடுவிப்பு - தமிழ்வின்
Source: Tamilwin
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி அம்பன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பௌர்ணமி மற்றும் ஞாயிறு விடுமுறை தினமான கடந்த 24ஆம் திகதி மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நேற்று (01.04.2024) தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட உழவு இயந்திர சாரதிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக குடத்தனை அம்பன் ஊர் எல்லை பகுதியிலிருந்து அம்பன் கிழக்கிலுள்ள ஒவ்வொருவரது வீட்டு வாசல்களிலும் வெடிகளை கொழுத்தியுள்ளனர்.
இதேவேளை கடந்த 24ஆம் திகதி காலை 6 மணிக்கு ஆரம்பமான மணல் அகழ்வில் 100க்கு மேற்பட்ட மணல் சுமைகள் உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.