இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தனர்!!
Source: Dinakaran
சென்னை : இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் மீனவர்களை அதிகாரிகள் வரவேற்று, அரசு வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மார்ச் 6-ல் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். 19 மீனவர்களையும் நடுக்கடலில் இலங்கை கடற்படை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது. மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்திய - இலங்கை தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.