Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழ்.யூனியன் கல்லூரி விவகாரம் - பொலிஸாருக்கு அழைப்பாணை

யாழ்.யூனியன் கல்லூரி விவகாரம் - பொலிஸாருக்கு அழைப்பாணை

Source: www.pathivu.com

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லுாாியின் இல்ல விளையாட்டு போட்டியில் இடம்பெற்றிருந்த இல்ல அலங்காரம் தொடா்பாக அதிபா், ஆசிாியா்கள், மாணவா்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடா்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாிக்கு மனித உாிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

பொலிஸாா் சட்டத்தை மீறி பாடசாலைக்குள் நுழைந்ததுடன், அதிபா், ஆசிாியா்கள், மாணவா்களை விசாரணைக்கு அழைத்த மைக்காக பொலிஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என இலங்கை ஆசிாியா் சங்கம் மனித உாிகைள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, மனித உாிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளா் த.கனகராஜ் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளாா்.

அதன் பிரகாரம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மனித உாிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்கும்படி அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.