Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

தனியாருடன் இணைய முடியாது: வட மாகாண போக்குவரத்து குழு தலைவர் - தமிழ்வின்

தனியாருடன் இணைய முடியாது: வட மாகாண போக்குவரத்து குழு தலைவர் - தமிழ்வின்

Source: Tamilwin

யாழில் (Jaffna) தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் (Sri Lanka Transport Board) வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (15.04.2024) இடம்பெற்ற புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடலில் கருத்துரைக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை (Sri Lanka Transport Board) பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும்.

ஆனால், இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது. புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன.

அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா (Vavunya) பேருந்து தரிப்படத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன.

இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பித்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை.

வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை." என தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Could not load content