Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மட்டக்களப்பில் கஜ முத்துக்களை கடத்திய நபர் கைது - தமிழ்வின்

மட்டக்களப்பில் கஜ முத்துக்களை கடத்திய நபர் கைது - தமிழ்வின்

Source: Tamilwin

மட்டக்களப்பு (Batticaloa) காந்தி பூங்கா பகுதியில் 2.5 மில்லியன் பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே நேற்றையதினம் (29.04.2024) மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, மட்டகளப்பு காந்தி பூங்காவில் அதிகாரிகள் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன்போது, மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கஜ முத்துக்களை வியாபாரம் செய்வதற்காக எடுத்து வந்து காத்தக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், அங்கு மாறுவேடத்தில் இருந்த விசேட அதிரடிப்படையினர் (CID) அவரை சுற்றிவழைத்து மடக்கி பிடித்து கைது செய்ததுள்ளனர்.

இதற்கமைய, சந்தேக நபரால் வியாபாரத்துக்காக எடுத்து வரப்பட்ட சட்ட விரோதமான 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜ முத்துக்களை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Could not load content