Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

செட்டிகுளம் - மன்னார் வீதியில் நோயாளர் காவு வண்டியை வழிமறித்து யானைகள் அட்டகாசம் - தமிழ்வின்

செட்டிகுளம் - மன்னார் வீதியில் நோயாளர் காவு வண்டியை வழிமறித்து யானைகள் அட்டகாசம் - தமிழ்வின்

Source: Tamilwin

வவுனியா (Vavuniya), செட்டிகுளம் ஊடாக மன்னார் (Mannar) செல்லும் பிரதான வீதியில் நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து வீதிக்கு வந்த யானைகள் வீதியை குறுக்கறுத்து அட்டகாசம் செய்துள்ளன.

இந்த சம்பவம் செட்டிகுளம், பறயனாளங்குளம் பகுதியில் இன்று காலை (30.04.2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் வீதியில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருவதாக அவ்வீதியால் பயணம் செய்யும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் பல மின்கம்பகளை உடைத்து யானைகள் சேதமாக்கியிருந்தன.

இந்நிலையில் காலை நோயாளர்களை ஏற்றிவந்த நோயாளர் காவு வண்டியையும் வழிமறித்ததுடன் நீண்ட நேரமாக போக்குவரத்துக்கு இடையூறாக வீதியில் நின்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவ்வீதியூடாக பயணிப்பவர்களும் அண்மித்து உள்ள கிராமவாசிகளும் யானைகளால் உயிர் அச்சுறுத்தலுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Could not load content