Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை - தமிழ்வின்

மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை - தமிழ்வின்

Source: Tamilwin

முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மன்னாரைச் சேர்ந்த 20 பூசகர்கள் யாத்திரை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளனர்.

மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் வைத்து நேற்றைய தினம் (01.05.2024) மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் யாத்திரை ஆரம்பித்துள்ளனர்.

மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி மண்டல பூஜை செய்யப்படவுள்ளதுடன், மதிய அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் திகதி மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை நோக்கி குறித்த பூசகர்கள் யாத்திரையை ஆரம்பிக்க உள்ளனர்.

மேலும், 20ஆம் திகதி காலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைந்து தமது விரதத்தை பூர்த்தி செய்யவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Could not load content