Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

புத்தளத்தில் சுறா மீன் இறைச்சியுடன் இருவர் கைது - தமிழ்வின்

புத்தளத்தில் சுறா மீன் இறைச்சியுடன் இருவர் கைது - தமிழ்வின்

Source: Tamilwin

புத்தளம் (Puttalam) - கற்பிட்டி, கண்டகுழி பகுதியில் அருகி வரும் சுறா மீன்களை சட்டவிரோதமான முறையில் பிடித்து இறைச்சியை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்ட கடற்றொழில் நீரியவளத்துறை திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோ கிராம் சுறா மீன் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் சுறா மீன் இறைச்சி 1000 ரூபா முதல் 1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக புத்தளம் மாவட்ட கடற்றொழில் நீரியவளத்துறை திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

Could not load content