Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்: மகனே கொன்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் - ஐபிசி தமிழ்

யாழில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்: மகனே கொன்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் (04.5.2024) கனடி ஜஸ்மின் என்ற 37 வயது குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த மரணம் தொடர்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்யப்பட்டாரா? எனக் கண்டறியும் நோக்குடன் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் 16 வயதுடைய மகன் காணாமல்போயுள்ளார். அவரைப் பொலிஸார் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகன், 'மொபைல் கேம்ஸ்' எனப்படும் கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், 16 வயதுடைய மேற்படி சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம்.

ஏனெனில் அவரது அறையில் சில சந்தேகத்திற்கிடமான வாசகங்கள் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளன என பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Could not load content