Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

போதை மாத்திரைகளுடன் பிரதேச செய்தியாளர் கைது...நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! - ஐபிசி தமிழ்

போதை மாத்திரைகளுடன் பிரதேச செய்தியாளர் கைது...நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

திருகோணமலை (Trincomalee) மொறவெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஔவை நகர் பகுதியில் வைத்து பிரதேச ஊடகவியலாளர் ஒருவரை போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளதாக மொறவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பிரதான வீதி,ரொட்டவெவ,மொறவெவ எனும் முகவரியில் வசிக்கும் 42 வயதுடைய அரச மற்றும் தனியார் ஊடகங்களில் பணியாற்றும் பிரதேச செய்தியாளர் என தெரியவந்துள்ளது.

காவல்துறையினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுத்த திடீர் சோதனையின் போதே இந்தக் கைது இடம்பெற்றதாகவும் இதன்போது இவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் இந்த போதை மாத்திரைகளை திருகோணமலையில் உள்ள மருந்தகம் ஒன்றில் கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள அதே சமயம் ஒரு தொகை போக்குவரத்து ஆவணங்களும் இவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் மொறவெவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கடந்த திங்களன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறவெவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Could not load content