Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

கல்முனையில் கோர விபத்து: ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் - ஐபிசி தமிழ்

கல்முனையில் கோர விபத்து: ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

கல்முனை (Kalmunai) பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்து விபத்தானது நேற்று (01) மட்டக்களப்பு (Batticaloa) - கல்முனை பிரதான வீதியில் உள்ள குருக்கள் மடத்தில் இடம்பெற்றதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கிரான்குளம் பகுதியிலிருந்து இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் களுதாவளை நோக்கிச் சென்றுள்ளனர்.

மிகவும் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் வளைவுப் பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் களுதாவளை பகுதியை சேர்ந்த 18 வயதுடையவர் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்தவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு (Batticaloa Base Hospital) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பெரும் சேதமடைந்துள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Could not load content