Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

சிறிலங்காவை எதிர்கொள்ளும் மேற்கிந்திய மகளிர் அணி - ஐபிசி தமிழ்

சிறிலங்காவை எதிர்கொள்ளும் மேற்கிந்திய மகளிர் அணி - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

சிறிலங்கா (Sri Lanka) மகளிர் அணிக்கெதிரான 3 ஒருநாள் மற்றும் 3 ரி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட மேற்கிந்திய தீவுகள் (West Indies) அணி நாட்டை வந்தடைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தானுடனான (Pakistan) தொடரை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் 15ஆம் திகதி சிறிலங்காவுடனான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியின் அனைத்து போட்டிகளும் காலி (Galle) சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், அனைத்து ரி20(T20) போட்டிகள் அம்பாந்தோட்டை (Hambantota) சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

மேலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைப் பொறுப்பு ஹேலி மேத்யூஸுக்கு (Hayley Matthews) வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மாதத்தின் சிறந்த வீராங்கனையாகவும் அவரை தேர்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Could not load content